ரசனை  

Posted by Subramanian Born In 1987

யோசனையோடு பார்த்தால் ரசனை கூட ஒரு யோசனை தான் .
ரசனையோடு பார்த்தால் யோசனை கூட ஒரு ரசனை தான் .
ரசனையோடு பார் மழை கூட தீர்த்தம் ஆகும் ,
யோசித்து பார் மனசாட்சி உன் கடவுள் ஆகும் ,
உழைத்து பார் வியர்வையின் வாசம் தெரியும் ,
காதலித்து பார் உலகம் அழகாக தெரியும் .
சந்தோசமாக இருக்கிற ஒவ்வொரு நாளும் "தீபாவளி " தான் .
சிரிக்கிற ஒவ்வொரு நொடியும் "சரவெடி " தான் .
தீபாவளி என்பது கொண்டாடும் தினத்தில் இல்லை ,
தீபாவளி என்பது கொண்டாடும் உன் மனதில் உள்ளது .

என் முதல் உலகம்  

Posted by Subramanian Born In 1987

என் முதல் உலகம் உனது கருவறை ,
நான் உயிர் பிழைக்க உன் உயிர் குடுத்தவள் நீ ,
என் முதல் உறவு நீ ,
நான் பேசிய முதல் வார்த்தை நீ ,
நான் ஊமை ஆனால் எனக்காக பேசும் ஒரு ஜீவன் நீ ,
என் முதல் கடவுள் நீ ,
ஏன் என்றால் கடவுளுக்கும் தாய் உண்டு ,
அன்பிற்கும் உருவம் உண்டு அது தான் அன்னை ,
எனக்கு பெயர் வைதவளின் பெயர் தான் அன்னை ,
உனது பட்டினி தான் எனது உணவு ,
என் முதல் உணவு நீ ,உறவு நீ ,உறவு நீ ,
உன்னை பெயர் சொல்ல கவிஞன் எதற்கு பிறந்த குழந்தை போதும் .
ஒவ்வொரு அம்மாவும் மதர் தெரசா தான்