யோசனையோடு பார்த்தால் ரசனை கூட ஒரு யோசனை தான் .
ரசனையோடு பார்த்தால் யோசனை கூட ஒரு ரசனை தான் .
ரசனையோடு பார் மழை கூட தீர்த்தம் ஆகும் ,
யோசித்து பார் மனசாட்சி உன் கடவுள் ஆகும் ,
உழைத்து பார் வியர்வையின் வாசம் தெரியும் ,
காதலித்து பார் உலகம் அழகாக தெரியும் .
சந்தோசமாக இருக்கிற ஒவ்வொரு நாளும் "தீபாவளி " தான் .
சிரிக்கிற ஒவ்வொரு நொடியும் "சரவெடி " தான் .
தீபாவளி என்பது கொண்டாடும் தினத்தில் இல்லை ,
தீபாவளி என்பது கொண்டாடும் உன் மனதில் உள்ளது .
என் முதல் உலகம் உனது கருவறை ,
நான் உயிர் பிழைக்க உன் உயிர் குடுத்தவள் நீ ,
என் முதல் உறவு நீ ,
நான் பேசிய முதல் வார்த்தை நீ ,
நான் ஊமை ஆனால் எனக்காக பேசும் ஒரு ஜீவன் நீ ,
என் முதல் கடவுள் நீ ,
ஏன் என்றால் கடவுளுக்கும் தாய் உண்டு ,
அன்பிற்கும் உருவம் உண்டு அது தான் அன்னை ,
எனக்கு பெயர் வைதவளின் பெயர் தான் அன்னை ,
உனது பட்டினி தான் எனது உணவு ,
என் முதல் உணவு நீ ,உறவு நீ ,உறவு நீ ,
உன்னை பெயர் சொல்ல கவிஞன் எதற்கு பிறந்த குழந்தை போதும் .
ஒவ்வொரு அம்மாவும் மதர் தெரசா தான்
நிழல்கள் கூட இரவில் என்னுடன் வருவது எல்லை ஆனால் நீ மட்டும்
கண்களை மூடினாலும் என்னுடன் கனவாக வந்தாய் ,
தனிமையின் தோழன் நீ ,
தனிமையில் நான் சிரித்தால் காரணம் நீ ,
ஒவ்வொரு மனிதனின் ரகசியம் நீ ,
ஒவ்வொரு மனிதனும் எடுத்து செல்லும் ஒரே நிரந்திரமான செல்வம் நீ
உண்மையில் கடைசி நொடி வரை நம்முடன் பயணம் செய்யும் ஒரே நண்பன் நீ,
நீ தான் என் "நினைவுகள்"
வெயிலில் நிழல் தந்தது உனது கிளை (கை)கள்
மலையில் குடை ஆனது உனது கிளைகள் ,
தென்றல் காற்று என்றால் வரவேற்று சிரிப்பது தான் உனது குணம் (முகம் ),
பறவைகளுக்கு நிரந்தர வீடு உனது கூந்தல் ,
துரவிகளிற்கு தியானம் (யானம்) கொடுத்தது உனது காலடி .
ஆகாயம் உன்னை பார்க்கிறதா ? இல்லை நீ பெரும் ஆகயத்தை பார்கிறையா ?
ம(பெ)ன்ணில் பிறந்து ,
ம(பெ)ன்னுடன் வளர்ந்து ,
ம (பெ )ன்னுள்ளே முடிவது தான் இயர்கையோ?
இயற்கையே நீ ஒரு கால் மனிதனோ ?
உன்னை நினைக்கும் போதெலாம் என்னை மறந்து சிரித்தேன் --- " காதல் "
சிரிக்கும் போதெலாம் உன்னை நினைத்தேன் --- "நட்பு".
பள்ளியில் கண்ணீர் வந்தது அனால் என்னோ மனம் வலிக்கவில்லை .
கல்லூரியில் மனம் வலித்தது அனால் கண்ணீர் மட்டும் கண்களில் வருவது இல்லை .
காதலை சொல்லாதது உதடுகள் அல்ல ,எனது கண்கள் ...!!!
சொல்லி இருந்தால் காதலனை ஆகி இருப்பேன் ,
சொல்லாததால் கவிஞனாய் நான் .
என் முகத்தை வைத்து என் அகத்தை மதிப்பெடதே,
என்னை புரிந்து கொண்டவர்களுக்கு நான் ஒரு நண்பன்,
புரியாதவர்களுக்கு நான் ஒரு புதிர்,
அனைத்து தாய் மொழியிலும் நான் பிறப்பேன்,
எனக்கு பேச தெரியாது ,அனால் புரிந்து கொள்ள கண்கள் போதும்,
உயிர் இல்லை ,அனால் அறிவு உண்டு ,
எக்ஸ்பெரி டே இல்லாத ஒரே மருந்து,
இப்படிக்கு..."புத்தகம்" .
தகவல் பரிமாற்றம் படாமல்,உணர்வுகள் பரிமாற்ற பட்டதன் விளைவு.
ஆடம்பரமாய் இருந்து அத்தியாவசமானது வரை உன் வளர்ச்சி,
அரசனையும் அடிமை ஆக்கிய அரசன் நீ ,
கைகளில் ஆறாம் விரலாய்,
முகவரியில் கடைசி நிழலாய்,
காதலர்களின் காதில் காதோர கம்மலாய்,
தொலை தூரத்தில் இருந்த நீ வந்ததால்,அருகில் இருப்பவர்கள் கூட தொலைவாக தெரிந்தார்கள்.
தூக்கத்திலும் நம்முடன் தூங்காமல் இருக்கும் தொலைதூர நண்பன் தான் இந்த கைபேசி...
தூரத்தில் இருப்பவர்களிடம் நிறைகளை மட்டும் பார்க்கும் மனமும்,
அருகில் இருந்தால் குறைகளை மட்டுமே பார்க்கும் குணமும் கொண்டதால் தான் என்னவோ....!
தொலை தூரத்தில் உள்ளவர்களை எண்களால் அழைத்த நாம்,
அருகில் இருப்பவர்களை கண்களால் கூட அழைக்கவில்லை.
காலையில் "அம்மா" என்று உச்சரிக்க கூட மறக்கிறான்,
ஆனால் "ஹலோ" என்று உச்சரிக்க மறக்கவில்லை.
கைக்குழந்தை அழுதால் குழந்தையிடம் பேசும் தாயை விட,
கைபேசி அழைத்தவுடன் பேசும் தாய் தான் அதிகம்.
தகவல் பரிமாற்றம் படாமல்,உணர்வுகள் பரிமாற்ற பட்டதன் விளைவு தான்.
உணர்வுகளின் மதிப்பு குறைந்தது,அதனால் சுவாரஸ்யமும் குறைந்தது.
தகவல் பரிமாற்றம் செய்யும் ஊடகம் தான் கைபேசி.
உணர்வுகள் பரிமாற்றம் செய்யும் ஊடகம் தான் மனிதன்.
வாழ்க்கையில் கைபேசியை தொலைத்தவர்கள் சிலர்.
கைபேசியால் வாழ்க்கையை தொலைத்தவர்கள் பலர் .
அலைவரிசையின் கைவரிசையால் இருந்து மீளுமா மானுட வாழ்க்கை...?
-----சுப்பிரமணியன் அழகுமலை.
மாற்றத்தால் மாற்றப்பட்டேன் .
நீ இயற்கையின் படைப்பு அல்ல ,
நீ மனிதனின் படைப்பு .
ஒவ்வொரு மனிதனின் ஆசையும் உன்னை தஞ்சமாக்குவது தான் .
நான் உன்னிடம் தஞ்சம் புகுந்தேன்,
பிரிவோம் என்றும் தெரிந்தும் காதல் கொண்டேன்.
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்.
நிரந்தரமற்ற வாழ்வில் நரந்தர முகவரியை
வாடகை வாழ்வில் வாடகை வீடே.
மாற்றத்தால் மாற்றப்பட்டேன் .
மாற்றத்தால் மாற்றபட்டது வீடு மட்டுமல்ல,என் மனமும் தான்.
தை பிறந்தால் வலி பிறக்கும்,
தை பிறந்தால் வழி பிறக்கும்.